இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப்போவது தோப்பில் முஹம்மது மீரான் எழுத்தின் சிறப்பு.தோப்பில் முஹம்மது மீரான் கதைகள் சமுதாயத்திற்கு நேராக வெளிச்சம் காட்டும் கதைகள் அல்ல. வகுப்புவாத சிந்தனையால மனிதநேயம் தொலைந்துபோவதை, மேல்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் தனிமையுணர்வோடு தவிப்பதை, தாய் தந்த உறவுகளை இழுத்து அறுத்துக் கொண்டு தனிமனிதர்களாக வாழ விரும்பும் இன்றைய தலைமுறையின் மனோபாவங்களை , பச்சையிலை வாசம் கமழும் கிராமச் சூழலில் நகரநாகரீகம் புகுந்து முகங்களில் சாயம் பூசி விடப்பட்ட மனிதமனங்களின் ஆழங்களை எல்லாம் மிகத் துல்லியமாகத் துழாவி எழுத்தால் உருமாற்றிக் காட்டுகின்றன தோப்பில் முஹம்மது மீரான் எழுத்துக்கள்……
தோப்பில் முஹம்மது மீரான்
மதுமிதா தொகுத்த “ மரங்கள்…நினைவிலும் புனைவிலும்” எனும் நூலிருந்து. ..சந்தியா பதிப்பகம்.
அருமையான கதை.
நன்றி.
தோப்பில் மீரான் கதைகள் எல்லாம் நல்லா இருக்கும். இந்த கதை அருமை. எங்க வீட்டில் நிற்கும் மாமரம் இன்னும் காய்க்கவில்லை என்ற வருத்தம் . அந்த மரத்தை காணும் போது வரும் ஒரு நாள் மாமரத்திலிருந்த தேன்கூட்டை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஒரிரு வாரங்கழித்து அடித்த காற்றில் அந்த தேன்கூடு கீழே விழுந்தது என் மனதை கீழே தள்ளி. இந்தாண்டாவது காய்க்குமா என்று எதிர்பார்க்கிறேன்
ஆஹா..இதுவல்லவா எழுத்து!!!!
enjoyed the stort